search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரம்மதேசத்தில் வாலிபர்கள் கைது"

    விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே அரசு பஸ்களை உடைக்க திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள பெருமுக்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (வயது 25), சக்திவேல் (23).

    இவர்கள் 2 பேரும் நேற்று மாலையில் திண்டிவனம்-மரக்காணம் சாலை பெருமுக்கல் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பிரம்மதேசம் சப்- இன்ஸ்பெக்டர் ஜெய் ஹிந்த்தேவி மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். ஏரிக்கரையோரம் நின்று கொண்டிருந்த ஆறுமுகம், சக்திவேல் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வழியாக வரும் பஸ்களை உடைக்க இருவரும் சதித் திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆறுமுகம், சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    ×